search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டக்டர் கைது"

    • பஸ்சில் தினமும் குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வந்தனர்.
    • கண்டக்டர் சரவணன் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து உள்ளார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (48). இவர் கோபி செட்டிபாளையத்தில் இருந்து நம்பியூர் செல்லும் 2ம் நெம்பர் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த பஸ்சில் தினமும் குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வந்தனர். அப்போது மாணவிகளிடம் கண்டக்டர் சரவணன் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தார்.

    இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் ஏற்கனவே தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பிலும் கண்டக்டர் சரவணனை கண்டித்துள்ளனர்.

    ஆனாலும் கண்டக்டர் சரவணன் இதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் மாணவிகளிடம் பெற்றோரும் கண்டக்டர் சரவணனை எச்சரித்து உள்ளனர்.

    இதை காதில் வாங்காமல் தொடர்ந்து கண்டக்டர் சரவணன் மாணவிகளின் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலையும் கோபிசெட்டி பாளையத்தில் இருந்து நம்பியூர் நோக்கி 2-ம் நெம்பர் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் டிரைவராக கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரும், கண்டக்டராக சரவணனும் பணியில் இருந்தனர்.

    அப்போது குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அந்த பஸ்சில் ஏறி தங்களது வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போதும் பணியில் இருந்த கண்டக்டர் சரவணன் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து உள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து புதுசூரிபாளையம் என்ற பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பஸ் வந்ததும் அவர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

    மேலும் அவர்கள் கண்டக்டர் சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தெரியவந்ததும் நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் நடத்த விபரங்களை கேட்டனர். பின்னர் கண்டக்டர் சரவணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    போலீசாரின் விசாரணையில் கண்டக்டர் சரவணன் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பின்னர் கோபி செட்டிபாளையம் 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கோபி செட்டிபாளையம் மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    அரசு பஸ் கண்டக்டர் சரவணன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தகவல் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே துறை ரீதியான நடவடிக்கையாக அவரை சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×